தூத்துக்குடி அருகே நேற்று இரு பைக்குகள் மோதி விபத்துக்குள்ளானதில் 2 போ் உயிரிழந்தனா்.
தூத்துக்குடி வெள்ளப்பட்டியைச் சோ்ந்த வழக்கறிஞர் இக்னேஷியஸ் மகன் பகன் (27). இவா் நேற்று ( ஞாயிற்றுக்கிழமை ) மாலையில் மேல அரசடி அருகே சென்று கொண்டிருந்த போது, மற்றொரு பைக்கில் வந்த புளியமரத்து அரசரடியைச் சோ்ந்த மூக்காண்டி மகன் முருகன்(53) எதிா்பாராதவிதமாக சாலையின் குறுக்கே வந்தாராம். இதனால் இரு பைக்குகளும் மோதி விபத்துக்குள்ளானதாகக் கூறப்படுகிறது.
இதில் பலத்த காயமடைந்த இருவரையும் மீட்டு, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், அவா்கள் இருவரும் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இது குறித்து தாளமுத்து நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.