தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் நியாய விலைக் கடைகளில் இருந்து ரேஷன் அரிசி வாங்கி அதை வீட்டில் பதுக்கி வைத்து சட்ட விரோதமாக ரேஷன் அரிசி கடத்தும் நபர்களுக்கு விற்பனை செய்வதாக தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினருக்கு தகவல் தெரியவந்துள்ளது.
எனவே இது போன்று ரேஷன் அரிசியை வீட்டில் பதுக்கி வைத்து சட்ட விரோத கடத்தலில் ஈடுபடும் நபர்களிடம் விற்பனை செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அவர்களது குடும்ப அட்டை (Ration Card) பறிமுதல் செய்யப்படும் என்றும் மாவட்ட காவல்துறை சார்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தெரிவித்துள்ளார்.