• vilasalnews@gmail.com

தமிழகத்தில் அதிக நிவாரண நிதி பெற வேண்டும் என்றால்.... தமிழிசை சுளீர் பேட்டி!

  • Share on

மகாராஷ்டிராவை போல் தமிழக மக்களும் ஆதரவு வழங்குவார்கள் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.


தூத்துக்குடி விமான நிலையத்தில் பாஜக முன்னாள் தமிழ் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :


மகாராஷ்டிராவை பொருத்தவரையில் நல்லாட்சிக்குக்கும் நல்ல வளர்ச்சிக்கும் மக்கள் ஆதரவு தந்திருக்கிறார்கள். அதேபோல், நம் பாரத பிரதமரின் நல்ல திட்டங்களுக்கு தமிழக மக்களும் ஆதரவு தரும் காலம் வெகு தூரம் இல்லை.


மத்தியில் பாஜக கூட்டணியில் இருந்து சென்றிருந்தால் எம்பிக்களால்  செயலாற்ற முடியும். ஆனால் திமுக கூட்டணியில் இருந்து போகக் கூடியவர்கள் கத்தி மட்டும் தான் பேச முடியும். ஆகையால், தமிழக மக்கள் 2026 சட்டமன்ற தேர்தலிலாவது யார் உங்களுக்கு நல்லது செய்வார்கள் என்பதை பார்த்து வாக்களிக்க வேண்டும் என தெரிவித்தார்.


மேலும் இங்கு, யானை மிதித்து இறந்தவர்கள் இரண்டு லட்சம். அதேவேளையில், கள்ளச்சாராயம் குடித்து இறந்தால் 10 லட்சம் கிடைத்திருக்கும். தமிழகத்தில் அதிக நிவாரண நிதி பெற வேண்டும் என்றால் கள்ளச்சாராயம் குடிக்க வேண்டும்  என்றும் தமிழிசை தெரிவித்தார்.

  • Share on

தூத்துக்குடி மாவட்டத்தில் கனிமவளத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை - அனுமதியின்றி கனிம வளத்தை கடத்திய லாரி பறிமுதல்!

தூத்துக்குடி மாவட்டத்தில் ரேஷன் அரிசியை வீட்டில் பதுக்கி வைத்து கடத்தல்காரர்களுக்கு விற்பனை செய்யும் பொதுமக்களுக்கு எஸ்பி கொடுத்த எச்சரிக்கை!

  • Share on