• vilasalnews@gmail.com

தூத்துக்குடி மாவட்டத்தில் கனிமவளத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை - அனுமதியின்றி கனிம வளத்தை கடத்திய லாரி பறிமுதல்!

  • Share on

தென் மாவட்டங்களில் இருந்து கேரள மாநிலத்திற்கு அனுமதியின்றி கனிம வளங்கள் கடத்தப்படுவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் புவியியல் மற்றும் சுரங்கத்துறை அதிகாரிகள் ஒரு வார காலமாக கனிம வளங்கள் ஏற்றிச் செல்லும் வாகனங்களை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 


அதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டத்திலும் புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குநர் பிரியா தலைமையிலான அதிகாரிகள் தொடர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 


இந்த கனிம வள சோதனையின் போது  50 சதவீதம் பசுமை வரி, உரிய ஆவணங்கள் ஏதும் இல்லாமலும், நடைச்சீட்டுகளில் குறிப்பிட்ட அளவுகளை விட அளவுக்கு அதிகமாக வண்டிகளில் கனிமங்களை ஏற்றுச் செல்லும் வாகனங்களையும் பரிசோதிக்கின்றனர். மேலும், தூத்துக்குடி மாவட்டத்தில் துறைமுகம் வழியாக கனிமவளங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வாகனங்கள் 50 சதவீதம் பசுமை வரி செலுத்தப்பட வேண்டும். அவ்வாறு பசுமை வரி செலுத்திய பின்பு தான் கனிம வளங்கள் வெளிநாட்டிற்கு எடுத்துச் சொல்லப்படுகின்றனவா எனவும் கண்காணித்து வருகின்றனர். 


அதன்படி, எட்டையபுரம் பகுதியில் அதிகாரிகள் நேற்று சோதனையில் ஈடுபட்டபோது, எந்தவித ஆவணங்களும் இல்லாமல் ஒரு லாரியில் எம்.சாண்ட் கொண்டுச் செல்லப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த லாரியை பறிமுதல் செய்த அதிகாரிகள் எட்டையபுரம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேலும் மாவட்டம் முழுதும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

  • Share on

தூத்துக்குடி டிஎம்பி வங்கியில் வேலை.. மாதம் 72 ஆயிரம் சம்பளம்...உடனே அப்ளை பண்ணுங்க!

தமிழகத்தில் அதிக நிவாரண நிதி பெற வேண்டும் என்றால்.... தமிழிசை சுளீர் பேட்டி!

  • Share on