தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் 170 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியது. சீனியர் எக்ஸிகியூட்டிவ் சர்வீஸ் (SCSE) பணியிடங்களுக்கு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.72,000 சம்பளம் வழங்கப்படும். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் முடிய இருப்பதால், தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பிக்கவும்.
தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு பிரபல தனியார் வங்கியாக தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி செயல்பட்டு வருகிறது. தற்போது இந்த வங்கியில் சீனியர் கஸ்டமர் எக்ஸிகியூட்டிவ் சர்வீஸ் (SCSE) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 170 பணியிடங்கள் நிரப்பப் படுகின்றது.
காலிப்பணியிடங்கள்
ஆந்திரா, அஸ்சாம், குஜராத், ஹரியானா, கேரளா, தெலுங்கானா, மத்திய பிரதேசம், உத்தரகண்ட், ராஜஸ்தான், மேற்கு வங்காளம், டெல்லி உள்ளிட இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் மொத்தம் 170 சீனியர் கஸ்டமர் எக்ஸிகியூட்டிவ் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.
கல்வித் தகுதி & வயது வரம்பு
முதுகலை பட்டம் முடித்து இருக்க வேண்டும். அதில், 60 சதவிகித மதிப்பெண்கள் பெற்றிருப்பது அவசியம். முன் அனுபவம் தேவையில்லை என்றாலும், அனுபவம் இருந்தால் கூடுதல் முன்னுரிமை அளிக்கப்படும். வயது வரம்பை பொறுத்தவரை விண்ணப்பதாரர்கள் 26 வயதுக்குள் இருக்க வேண்டும். வயது வரம்பு தளர்வுகளும் உண்டு.
சம்பளம் எவ்வளவு?
சம்பளத்தை பொறுத்தவரை தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.72,061 ரூபாய் வழங்கப்படும்.
தேர்வு முறை
தகுதியான விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் தேர்வு, நேர்முகத்தேர்வு (ஆங்கிலம்) என இரண்டு கட்ட தேர்வுகளுக்கு பிறகு தேர்வு செய்யப்படுவார்கள். ஆன்லைன் தேர்வு சென்னை, பெங்களூர், திருவனந்தபுரம், ஐதராபாத், விசாகப்பட்டினம், மும்பை, கொல்கத்தா, டெல்லி உள்பட நாடு முழுவதும் உள்ள முக்கிய பெருநகரங்களில் நடைபெறும்.
விண்ணப்பிப்பது எப்படி?
விண்ணப்பிக்க ஆர்வம் இருக்கும் விண்ணப்பதாரர்கள் தேர்வு அறிவிப்பினை ஒருமுறை படித்து விண்ணப்பிக்கவும். https://www.tmbnet.in/ இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப கட்டணம் ரூ.1,000 ஆகும். ஆன்லைன் வழியாக கட்டணத்தை செலுத்த வேண்டும்.
கடைசி தேதி
விண்ணப்பிக்க வரும் 27 ஆம் தேதி கடைசி ஆகும். இன்னும் 3 நாட்கள் மட்டுமே இருப்பதால் தகுதி இருக்கும் விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பித்து கொள்ளலாம். ஆன்லைன் வழியான எழுத்து தேர்வு டிசம்பர் மாதத்தில் நடைபெறும். தேதி அதற்கு முன்னதாக அறிவிக்கப்படும். எழுத்து தேர்வுக்கான முடிவானது வரும் டிசம்பர் இறுதியில் அல்லது ஜனவரியில் வெளியிடப்படும்.
மேலும் கூடுதல் தகவல்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்து படிக்கவும்:https://www.tmbnet.in/tmb_careers/doc/ADV_SCSE_IBP.pdf