ஒட்டப்பிடாரத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்த வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் இந்திரா நகரைச் சேர்ந்த சரவணன் என்பவரது மகன் அருண்குமார் (29). கூலித் தொழிலாளியான இவருக்கு மனைவி, இரு குழந்தைகள் உள்ளது. இந்நிலையில், அருண்குமார் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஆர்வம் காட்டி வந்தாராம். இதில் தொடர்ந்து பணத்தை இழந்து வந்த நிலையில், ரூ.20 ஆயிரம் பணத்தை இழந்ததாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து, நேற்று முன்தினம் நள்ளிரவு, வீட்டில் தூக்குப் போட்டுக் கொண்டாராம். சத்தம் கேட்டு எழுந்த அவரது மனைவி, அக்கம் பக்கத்தினர் உதவியோடு அருண்குமாரை மீட்டு ஒட்டப்பிடாரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கெனவே அவர் உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர். இதுகுறித்து ஒட்டப்பிடாரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.