• vilasalnews@gmail.com

திருநங்கைகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் : தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தகவல்!

  • Share on

திருநங்கைகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க நவ.,25 க்குள் சுயவிவரக் குறிப்பு விவரங்களை அனுப்பலாம் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-


திருநங்கைகளுக்கான முழுமையான சமூக பாதுகாப்பையும், சமூக அங்கீகாரத்தையும் அளித்து, அவர்களை சமூகத்தின் ஓர் அங்கமாக ஏற்றுக்கொள்ளும் பொருட்டு தமிழ்நாடு அரசின் மூலம் தமிழ்நாடு திருநங்கைகள் நல வாரியம் 2008 ல் அமைக்கப்பட்டது. சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்ற திருநங்கைகளுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் பொருட்டு திருநங்கைகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் சென்னை மாவட்டத்தில் நடத்தப்பட உள்ளதால்,


அதற்கு ஏதுவாக தூத்துக்குடி மாவட்டத்தில் விருப்பப்படும் திருநங்கைகளின் தங்களது சுயவிவரக் குறிப்பு விவரங்களை படிவத்தில் பூர்த்தி செய்து 25.11.2024 காலை 10.00 மணியளவில் தூத்துக்குடி மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகம், கோரம்பள்ளம் தூத்துக்குடி சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என மாவட்ட ஆட்சித் தலைவர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.

  • Share on

கோவில் யானை தாக்கி உயிரிழந்த இருவர் குடும்பத்திற்கு முதல்வர் நிதியுதவி!

ஒட்டப்பிடாரத்தில் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த வாலிபர் தற்கொலை!

  • Share on