• vilasalnews@gmail.com

விளாத்திகுளம் அருகே அரசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து!

  • Share on

விளாத்திகுளம் அருகே அரசு பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 15க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் போக்குவரத்து பணிமனையைச் சேர்ந்த அரசு பேருந்து ஒன்று இன்று கோவில்பட்டியில் இருந்து விளாத்திகுளம் நோக்கி வந்து கொண்டிருந்தது. இப்பேருந்தை செல்வக்குமார் என்ற ஓட்டுநர் ஓட்டி வந்துள்ளார். 

இந்த நிலையில், கழுகாசலபுரம் கிராமம் அருகே பேருந்து வந்து கொண்டிருந்தபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து  சாலையோரத்தில் இருந்த தடுப்பு கம்பியின் மீது மோதி அருகே இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து உள்ளானது. இந்த விபத்தில் பேருந்தின் ஓட்டுநர் செல்வக்குமார், நடத்துநர் கார்த்திக்கேயன் உட்பட 15-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். இந்த விபத்து குறித்து தகவலறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேருந்து விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு உடனடியாக அவ்வழியாக வந்த பிற வாகனங்களின் உதவியோடு, ஆம்புலன்ஸ்காக காத்திருக்காமால் துரிதமாக செயல்பட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

  • Share on

தூத்துக்குடி மாவட்ட எஸ்பியின் புதிய முயற்சி... பலன் கொடுக்குமா பொதுமக்களுக்கு?

அறிமுகத் தேர்தலிலேயே சாதனை செய்த பிரியங்கா காந்தி : தூத்துக்குடியில் சி.எஸ்.முரளிதரன் தலைமையில் கொண்டாட்டம்!

  • Share on