தூத்துக்குடியில் இருசக்கர வாகனத்தின் மீது சரக்கு வாகனம் மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், சிங்கத்தாகுறிச்சி அருகில் உள்ள காசிலிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் என்பவரது மகன் மாரிசெல்வம் (25). இவர் நேற்று மதியம் தனது பைக்கில் தூத்துக்குடி எப்சிஐ குடோன் அருகே வந்து கொண்டிருந்தபோது, எதிரே வந்த ஒரு லோடு ஆட்டோ பைக் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு, சிகிச்சை பலனளிக்காமல் நேற்று மாலை பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் திருமுருகன் வழக்குப் பதிந்து லோடு ஆட்டோவை ஓட்டி வந்த தூத்துக்குடி 3வது மைல் 2வது தெருவை சேர்ந்த காந்தி மகன் கலைச்செல்வன் (22) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.