விளாத்திகுளம் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில், அம்மா நகரும் நியாய விலை கடையை சின்னப்பன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
விளாத்திகுளம் தொகுதிக்கு உட்பட்ட, புதூர் ஊராட்சி ஒன்றியம், மணியக்காரன்பட்டி ஊராட்சி மன்றத்திற்கு உட்பட்ட, தவசிலிங்கபுரம் கிராமம், மிட்டாவடமலாபுரம் ஊராட்சி மன்றத்திற்கு உட்பட்ட, சுந்தரபச்சையாபுரம் கிராமம் , விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம், வேம்பார் வடக்கு ஊராட்சி மன்றத்திற்கு உட்பட்ட, இராயப்பபுரம் கிராமம், ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம், வேப்பலோடை ஊராட்சி மன்றத்திற்கு உட்பட்ட, வடக்கு கல்மேடு கிராமம் ஆகிய பகுதிகளில், அம்மா நகரும் நியாய விலை கடையை, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் தொடங்கி வைத்தார்.
முன்னதாக, விழாவிற்கு வருகை தந்த, விளாத்திகுளம் சட்ட மன்ற உறுப்பினர் சின்னப்பனுக்கு, கிராம மக்கள், அதிமுக நிர்வாகிகள், உறுப்பினர்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து, கிராமத்தில் வைக்கப்பட்டிருந்த மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் திருஉருவப்படத்திற்கு விளாத்திகுளம் சட்ட மன்ற உறுப்பினர் சின்னப்பன் மலர்தூவி மரியாதை செய்தார்.
இந்நிகழ்ச்சியில், புதூர் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் சுசிலா தனஞ்செயன், விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் முனியசக்தி ராமச்சந்திரன்,
மாவட்ட கவுன்சிலரும், மேற்கு ஒன்றியச் செயலாளருமான ஞானகுருசாமி, ஒட்டப்பிடாரம் முன்னாள் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவரும் , கிழக்கு ஒன்றியச் செயலாளருமான காந்தி (எ ) காமாட்சி, மாவட்ட கவுன்சிலரும், மேற்கு ஒன்றியச் செயலாளருமான நடராஜன்
விளாத்திகுளம் முன்னாள் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் என்.கே.பி.வரதராஜபெருமாள், மாவட்ட கூட்டுறவு ஒன்றியத் தலைவர் தனபதி, முன்னாள் மாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவரும், எம்ஜிஆர் மன்ற இணைச்செயலாளர் தெய்வேந்திரன், மாவட்ட துணைச் செயலாளர் வெம்பூரார், பொதுக்குழு உறுப்பினர் கடற்கரைவேல், கம்பத்துப்பட்டி கூட்டுறவு சங்கத் தலைவர் விஜயகுமார், காடல்குடி கூட்டுறவு சங்கத் தலைவர் செண்பகராமன், மாவட்ட பிரதிநிதி நாகசுந்தராஜ்,
மாவட்ட விவசாய அணி தலைவர் சௌந்திரராஜன், ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் வெற்றிவேலன், மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி இணைச்செயலாளர் போடுசாமி, ஒன்றிய எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் கந்தவேல், தகவல் தொழில்நுட்ப பிரிவு கிழக்கு ஒன்றியச் செயலாளர் மோகன் பி.டி.ஆர்.ராஜகோபால், ஒன்றிய அம்மா பேரவை இணைச்செயலாளர் தங்கச்செல்வன், கிழக்கு ஒன்றிய சிறுபாண்மை அணிச் செயலாளர் தென்குமரன், கிளைச்செயலாளர் முத்து முனியசாமி, இரயப்பபுரம் கிளை செயலாளர் அந்தோணிராஜ், ஊராட்சி மன்ற தலைவர்கள், துணைத்தலைவர்கள், உறுப்பினர்கள், மற்றும் அதிமுக நிர்வாகிகள், கிராம பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.