• vilasalnews@gmail.com

இரவு - பகல் பாராமல் மழைநீரை வெளியேற்றும் பணியில் அமைச்சர் கீதாஜீவன்.. மேயர் ஜெகன் பெரியசாமி!

  • Share on

தூத்துக்குடியில் இரவு-பகல் பாராமல் மழைநீர் தேங்கிய பகுதிகளை அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக தூத்துக்குடி மாநகர் பகுதியில் உள்ள தாழ்வான சில இடங்களில் மழைநீர் தேங்கியது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதனால், பொதுமக்களின் நலன் கருதி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் ஒவ்வொரு பகுதியாக அதிகாரிகளுடன் சென்று மழைநீரால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு, பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். 

பின்னர், அந்த பகுதிகளில் துரித நடவடிக்கை எடுத்து, மழைநீரை வெளியேற்றும் பணிகளை இரவு-பகல் பாராமல் செய்து வருகிறார்கள். மேலும், அப்பகுதியில் உள்ள கண்காணிக்கும் அதிகாரிகளையும், கட்சியினரையும் தொடர்பு கொண்டு அப்பகுதியில் நடைபெறும் பணிகள் என்ன நிலையில் இருக்கிறது என்பது குறித்தும் அவ்வப்போது விசாரித்து பணிகளை துரிதப்படுத்தி வருகிறார்கள்.

அதன் ஒரு பகுதியாக நேற்றிரவு தூத்துக்குடி மாநகராட்சி 18வது வார்டுக்குட்பட்ட  ஹரிராம் நகர், காந்திநகர் வள்ளலார் கோவில் அருகில் மழைநீரை வெளியேற்றும் பணியை அமைச்சர் கீதா ஜீவன் ஆய்வு மேற்கொண்டார். 

அதே போல, நேற்றிரவு தூத்துக்குடி மாநகர் நான்காம் கேட் பகுதியில் நடைபெற்ற மழைநீர் வெளியேற்றும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு மேற்கொண்டார்.

  • Share on

திருச்செந்தூரில் கடலில் நீராடிய 2 பக்தர்களுக்கு காயம்!

தூத்துக்குடியில் நடந்த விபத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழப்பு

  • Share on