• vilasalnews@gmail.com

திடீரென மதுரையில் தரையிறங்கிய சென்னை - தூத்துக்குடி விமானம்.. உள்ளே இருந்த அமைச்சர் எ.வ.வேலு!

  • Share on

சென்னையில் இருந்து தூத்துக்குடி சென்ற விமானம் மதுரையில் அவசரமாக தரையிறங்கியது. இதனால் பயணிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.


சென்னையிலிருந்து தனியார் விமானம் தினமும் காலை 6 மணிக்கு புறப்பட்டு 7.35 மணிக்கு தூத்துக்குடி சென்றடையும். தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு உட்பட 77 பயணிகளுடன் சென்னைலிருந்து நேற்று காலை 6.26 மணியளவில் புறப்பட்ட இந்த விமானம் தூத்துக்குடிக்கு 7.45 மணிக்கு வந்தது. தூத்துக்குடி விமான நிலையத்தில் நிலவிய மோசமான வானிலை மற்றும் அதிக மேகமூட்டம் காரணமாக விமானம் தரையிறங்க முடியவில்லை. சில நிமிடங்கள் வானிலேயே வட்டமடித்தது. வானிலை தொடர்ந்து மோசமாகவே இருந்ததால் மதுரைக்கு திருப்பி அனுப்பப்பட்டு அங்கு பத்திரமாக தர இறங்கியது. இதையடுத்து, அமைச்சர் எ.வ.வேலு கன்னியாகுமரிக்கு காரில் புறப்பட்டுச் சென்றார் .

  • Share on

தூத்துக்குடியில் லிப்ட் கேட்டு சென்ற பெண் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழப்பு!

திருச்செந்தூரில் கடலில் நீராடிய 2 பக்தர்களுக்கு காயம்!

  • Share on