• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் லிப்ட் கேட்டு சென்ற பெண் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழப்பு!

  • Share on

தூத்துக்குடியில் நாய் குறுக்கே பயந்ததால் பைக்கில் இருந்து தவறி விழுந்து பெண் தூய்மை பணியாளர் பரிதாபமாக உயிரிழந்தார்.


தூத்துக்குடி அருகே உள்ள அத்திமரப்பட்டி வடக்குத் தெருவை சேர்ந்தவர் பெருமாள். இவரது மனைவி பெருமாள் தாய் ( 60 ). இவர் தூத்துக்குடியில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை வேலை முடிந்து வீட்டுக்கு செல்வதற்காக திருச்செந்தூர் சாலையில் நின்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக சென்ற ஒரு பைக்கில் லிப்ட் கேட்டு ஏறி சென்றுள்ளார்.


திருச்செந்தூர் ரோடு மேம்பாலம் சத்யா நகர் அருகே செல்லும்போது நாய் ஒன்று குறுக்கே பாய்ந்துள்ளது. இதனால் பைக்கை ஒட்டிச் சென்ற அந்த வாலிபர் திடீரென பிரேக் போட்டுள்ளார். இதில் எதிர்பாராத விதமாக பைக்கின் பின்னால் அமர்ந்திருந்த பெருமாள் தாய் கீழே விழுந்து தலையில் காயமடைந்ததில் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தென்பாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Share on

ஒரு மாத காலத்திற்குள் வேண்டும்... அரசு, தனியார் நிறுவனங்களுக்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!

திடீரென மதுரையில் தரையிறங்கிய சென்னை - தூத்துக்குடி விமானம்.. உள்ளே இருந்த அமைச்சர் எ.வ.வேலு!

  • Share on