• vilasalnews@gmail.com

மக்களே ஒத்துழையுங்கள்.... பொதுமக்களிடம் தூத்துக்குடி மாநகராட்சி வேண்டுகோள்!

  • Share on

பொது மக்கள் கழிவுநீர் செல்லும் கால்வாய்களில் குப்பைகளை கொட்டாமல் ஒத்துழைக்கும் படி மாநகராட்சி ஆணையாளர் மதுபாலன் கேட்டுக் கொண்டுள்ளார். 

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், மாநகராட்சியின் மூலம் கடந்த 3 மாதங்களாக மேற்கொள்ளப்பட்ட முன்னெடுப்பு நடவடிக்கைகள் காரணமாக மாநகரின் பல்வேறு மழைநீர் வெளியேறும் கால்வாய்களில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த மழைநீர் எவ்வித தடையும் இன்றி வெளியேறி வருகிறது. மழைநீரை வெளியேற்ற 45 மழைநீர் உந்து நிலையங்கள் மற்றும் 19 பாதாள சாக்கடை கழிவுநீர் உந்து நிலையங்கள் மூலம் மழைநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அதற்கென 24 மணி நேரமும் சிறப்பு பணியாளர்கள் நியமிக்கப்பட்டு மின் மோட்டார்கள் இயக்கப்படுகிறது. 

இதன் பலனாக இயல்பு வாழ்க்கை பாதிக்காத வண்ணம் மாநகரின் செயல்பாடு நடைபெறுகிறது. மேலும் நகரின் பள்ளமான பகுதிகளான லூர்தம்மாள் புரம், ராஜீவ் நகர், P& T காலனி ஆகிய பகுதிகளில் மின் மோட்டார்கள் மற்றும் கழிவுநீர் வாகனங்கள் மூலம் மழைநீர் வெளியேற்றப்படுகிறது. இப்பணி  மேயர் மற்றும் ஆணையாளரால் கள ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. 

இதன் தொடர்ச்சியாக, நோய் தடுப்பு நடவடிக்கைகளும், கொசு ஒழிப்பு பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன. மேலும் பொது மக்கள் கழிவுநீர் செல்லும் கால்வாயில்களில் குப்பைகளை கொட்டாமல் ஒத்துழைக்கும் படி மாநகராட்சி ஆணையாளர் மதுபாலன் கேட்டுக் கொண்டுள்ளார்.

  • Share on

தூத்துக்குடியில் மழை நீர் தேங்கிய பகுதிகளில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு

ஒரு மாத காலத்திற்குள் வேண்டும்... அரசு, தனியார் நிறுவனங்களுக்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!

  • Share on