• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் மழை நீர் தேங்கிய பகுதிகளில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு

  • Share on

தூத்துக்குடியில் மழை நீர் தேங்கிய பகுதிகளில் அமைச்சர் கீதாஜீவன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தூத்துக்குடியில் பெய்த தொடர் கனமழையால் மாநகராட்சி பகுதிகளில் பி & டி காலனி, கதிர்வேல் நகர், பிஎம்சி பள்ளி அருகே உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் தேங்கி நிற்பதாக அப்பகுதி மக்களிடமிருந்து தகவல் வந்ததையடுத்து, அமைச்சர் கீதாஜீவன் அப்பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர், மழை நீரை வெளியேற்றும் நடவடிக்கைகளை துரிதப்படுத்தினார். ஆய்வின் போது மாநகராட்சி ஆணையர் மதுபாலன், உதவி ஆணையர் பாலமுருகன், உதவி செயற்பொறியாளர் சேகர், திமுக மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாமன்ற உறுப்பினர்கள் கண்ணன், ராமர், வட்டச் செயலாளர் மந்திரகுமார், பெருமாள் பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

  • Share on

ஸ்பிக் நகர் சுற்றுவட்டார பகுதிகளில் தேங்கிய மழைநீர் - சண்முகையா எம்எல்ஏ பார்வையிட்டு மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை!

மக்களே ஒத்துழையுங்கள்.... பொதுமக்களிடம் தூத்துக்குடி மாநகராட்சி வேண்டுகோள்!

  • Share on