• vilasalnews@gmail.com

ஸ்பிக் நகர் சுற்றுவட்டார பகுதிகளில் தேங்கிய மழைநீர் - சண்முகையா எம்எல்ஏ பார்வையிட்டு மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை!

  • Share on

ட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, ஸ்பிக் நகர் சுற்றுவட்டார பகுதிகள், மாநகராட்சி 55,56,57,58 வார்டுகளுக்குட்பட்ட பாரதி நகர், குமாரசாமி நகர், முள்ளக்காடு, நேசமணி நகர், காந்தி நகர், சவேரியார்புரம் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ள இடங்களை ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா நேரில் சென்று பார்வையிட்டார்.


பின்னர், தேங்கியுள்ள மழை நீரை விரைவாக வெளியேற்றுவதற்கும், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காத வண்ணம் அனைத்துவிதமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், சம்பந்தப்பட்ட அனைத்துத்துறை அதிகாரிகளும் செயல்படுமாறு அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.


இந்நிகழ்வில், மாநகராட்சி அலுவலர் ராஜபாண்டி, மின்வாரிய உதவி செயற்பொறியாளர் உமையருபாகம், உதவி பொறியாளர் பகவதி, திமுக பகுதி செயலாளர் ஆஸ்கர், வட்டச் செயலாளர்கள் கருப்பசாமி, பாலமுருகன், மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர் ராஜேந்திரன், மகளிரணி கல்பனா, பகுதி இளைஞரணி அமைப்பாளர் ராஜ் மற்றும் திமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  • Share on

இலங்கைக்கு கடத்த இருந்த பீடி இலைகள் பறிமுதல் : ஒருவர் கைது!

தூத்துக்குடியில் மழை நீர் தேங்கிய பகுதிகளில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு

  • Share on