குலசேகரபட்டினம் அருகே இலங்கைக்கு கடத்த இருந்த 1500 கிலோ பீடி இலைகளை க்யூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம், குலசேகரபட்டினம் வடக்கூர் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு பீடி இலை கடத்துவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் க்யூ பிரிவு ஆய்வாளர் விஜய அனிதா தலைமையில் உதவி ஆய்வாளர்கள் ஜீவமணி தர்மராஜ், செல்வகுமார் ராமசந்திரன், சிறப்பு உதவி ஆய்வாளர் கீதன், ராமர், முதல்நிலை காவலர் பழனி பாலமுருகன் உள்ளிட்ட போலீசார் கடற்கரையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, இலங்கைக்கு கடத்துவதற்காக சரக்கு வாகனத்தில் கொண்டு வந்த 1500 கிலோ பீடி இலைகளை பறிமுதல் செய்தனர். மேலும், வாகனத்தின் ஓட்டுனர் திருச்சி மாவட்டம், மணப்பாறை காந்திநகரைச் சேர்ந்த செல்வம் என்பவரது மகன் பிரகாஷ் (33) என்பவரை கைது செய்யப்பட்டார். மேலும், கைப்பற்றப்பட்ட 1500 கிலோ பீடி இலை பண்டல்கள் வாகனத்துடன் தூத்துக்குடி க்யூ பிரிவு அலுவலகம் கொண்டு வரப்பட்டது. இதுகுறித்து க்யூ பிரிவு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.