தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருவதன் காரணமாக பள்ளிகளுக்கு இன்று (நவ.,20 ) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், நேற்று இரவு முதல் மழை விடாமல் பெய்து வருகிறது. இதன் காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் அறிவித்துள்ளார். மேலும் கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.