குலசேகரப்பட்டினம் தசரா திருவிழா மற்றும் திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழாவின் போது சிறந்த முறையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து சிறப்பாக பணியாற்றிய திருச்செந்தூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளருக்கு நினைவுப்பரிசு வழங்கி பாராட்டினார்.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோவில் தசரா திருவிழா மற்றும் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்த சஷ்டி விழா ஆகிய திருவிழாக்களின் போது எந்தவித அசம்பாவிதமும் இன்றி அமைதியான முறையில் நடைபெற சிறப்பான முறையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்ட திருச்செந்தூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் வசந்தராஜை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் இன்று (19.11.2024) மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் வைத்து நினைவுப்பரிசு வழங்கி பாராட்டினார்.