தூத்துக்குடியில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி சார்பில் கிழிந்த, அழுக்கடைந்த ரூபாய் நோட்டுகள் மாற்றும் முகாம் நடைபெற உள்ளது.
பாரத ரிசர்வ் வங்கி மற்றும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி இணைந்து நடத்தும் நாணய திருவிழா மற்றும் கிழிந்த, அழுக்கடைந்த ரூபாய் நோட்டுகள் மாற்றும் முகாம் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி தூத்துக்குடி தெற்கு கிளையில் வருகிற 21ஆம் தேதி வியாழக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது. இந்த முகாமை பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.