தூத்துக்குடியில் இந்திரா காந்தி பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.
தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் இந்திய பிரதமர் இந்திராகாந்தியின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியை முன்னிட்டு தூத்துக்குடி கடற்கரை சாலையில் உள்ள இந்திராகாந்தி திருஉருவச்சிலைக்கு மாவட்ட தலைவர் சி.எஸ்.முரளிதரன் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டனர்.