• vilasalnews@gmail.com

அக்கநாயக்கன்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் சண்முகையா எம்எல்ஏ திடீர் ஆய்வு!

  • Share on

தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி, ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, அக்கநாயக்கன்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா திடீர் ஆய்வு மேற்கொண்டார். 


உயர்நிலைப்பள்ளியில் மாணவ மாணவிகளிடம் எதிர்காலத்தில் உயர் பதவிக்கு செல்ல வேண்டும்,  குறிக்கோள்களுடன் நீங்கள் படிக்க வேண்டும், ஆசியர்கள் பெற்றோர்கள் கூறுவதை கேட்க வேண்டும்  என மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார். மேலும் பள்ளிக்கு தேவையான அடிப்படை தேவைகள் குறித்தும் தலைமை ஆசிரியரிடம் கேட்டறிந்தார். பள்ளிக்கு கழிப்பறை வசதி, குடிநீர் வசதி, டிஜிட்டல் வகுப்பு வசதி உள்ளிட்ட பள்ளியின் சார்பில் வைக்கப்படும் அனைத்து  கோரிக்கைகளும் படிப்படியாக நிறைவேற்றி தருவதாகவும் உறுதியளித்தார்.


தொடர்ந்து அங்குள்ள தொடக்கப் பள்ளிக்குச் சென்ற சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா பள்ளிக் குழந்தைகளுக்கு காலையில் வழங்கப்படும் முதலமைச்சரின் காலை சிற்றுண்டி திட்டத்தில் உணவு தரமாக வழங்கப்படுகிறதா? இந்த திட்டம் யாரால் கொண்டு வரப்பட்டது தெரியுமா? என குழந்தைகளிடம் கேட்டறிந்தார். 


இதில், யூனியன் சேர்மன் ரமேஷ், உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை ஜெயக்கொடி, தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை புவனேஷ்வரி, ஊராட்சி மன்ற தலைவர் அய்யாத்துரை, ஒன்றிய கவுன்சிலர் ஈஸ்வரி, திமுக ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் கணேசன், ஒன்றிய மகளிரணி துணை அமைப்பாளர் ராமலட்சுமி, மகளிரணி காளியம்மாள், நித்யா, இளைஞரணி மகேஷ், ஆகாஷ், கிளைச் செயலாளர்கள் அனந்த ராமகிருஷ்ணமூர்த்தி, இளையராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  • Share on

திருச்செந்தூர் கோவிலில் நடை சாத்தப்பட்டு பரிகார பூஜை!

தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை!

  • Share on