• vilasalnews@gmail.com

திருச்செந்தூர் கோவிலில் நடை சாத்தப்பட்டு பரிகார பூஜை!

  • Share on

முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வளர்க்கப்படும் தெய்வானை என்கிற கோவில் யானை மிதித்து பாகன் உள்ளிட்ட இருவர் உயிரிழந்த நிலையில், கோவில் நடை சுமார் 45 நிமிடங்கள் சாத்தப்பட்டு, தேவையான பரிகார பூஜைகள் செய்யப்பட்ட பிறகே கோவில் நடை மீண்டும் திறக்கப்பட்டது.


திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் இன்று மதியம் சுமார் 3 மணி அளவில் கோவில் யானை தெய்வானை  மிதித்து 2 பேர் உயிரிழந்தனர். திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். .இந்த நிலையில்,  கோவிலுக்குள் இருந்த பக்தர்கள் வெளியேற்றப்பட்டு, அனைத்து நடைகளும் அடைக்கப்பட்டன. 

 

பின்னர் மாலை 5 மணிக்கு மேல் 2 பேர் பலியான இடத்தில் பரிகார பூஜைகள் நடத்தப்பட்டது. கணபதி ஹோமம் வளர்க்கப்பட்டு அந்தப் பகுதியில் சிறப்பு தீபாரணை நடந்தது. அதன் பின்னர் மாலை 6 மணியளவில் மீண்டும் கோவில் நடை திறக்கப்பட்டு சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு தீபாரணை நடந்தது. அதன் பின்பு கோவிலுக்குள் வழக்கம் போல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

  • Share on

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளே... உங்களுக்கான குறைகளை தீர்க்கும் இந்த நாளை நோட் பன்னிக்கோங்க!

அக்கநாயக்கன்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் சண்முகையா எம்எல்ஏ திடீர் ஆய்வு!

  • Share on