• vilasalnews@gmail.com

சுதந்திர போராட்ட வீரர் மன்னர் தேர் மாறன் நினைவிடத்தில் திரைப்பட நடிகர் ஸ்ரீ நாத் மாலை அணிவித்து மரியாதை!!

  • Share on

இந்திய சுதந்திர போராட்ட வீரர் மன்னர் தேர் மாறன் நினைவிடத்தில் திரைப்பட நடிகர் ஸ்ரீ நாத் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.


தூத்துக்குடியில் இன்று (17.11.2024) மாலை ஆங்கிலேயர்களை எதிர்த்து கடைசி வரை தீரத்துடன் போராடிய வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரர்கள், மற்றும் ஊமைத்துரை, ஆகியோருக்கு கப்பல் மூலம் ஆயுதங்கள் சென்றடைய உதவிய சுதந்திர போராட்ட வீரர் மன்னர் தொன் கபிரியேல் தெக் குரூஸ் வாஸ் கோமஸ் பரதவர்ம பாண்டியன் (எ) பாண்டியபதி தேர் மாறன் நினைவிடத்தில் திரைப்பட நடிகர் ஸ்ரீ நாத் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். முன்னதாக வேலன் ஹைப்பர் மார்க்கெட் எதிரே உள்ள குருஸ் பர்னாந்தின் 155 பிறந்தநாளை முன்னிட்டு  திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.


நிகழ்ச்சியில் சென்னை பரதநல பேரவை சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் வெலிங்டன், பரதர் முன்னேற்ற பேரவை தலைவர் தயாளன், சென்னை பரதநல பேரவை பொதுச் செயலாளர் சூடு ராயன், பரதநல பேரவை அமைப்பாளர் ஆரோக்கியராஜ் பர்னாந்து, பரதர் முன்னேற்ற பேரவை பொருளாளர் தில்லை அசோக் பாண்டிச்சேரி, மற்றும் தேர் மாறன் கல்லறை மீட்பு குழு அந்தோணி சாமி, இன்னாசி, பெல்லா, விஜயக்குமார், ஆரோக்கியசாமி, விஜயன், பரதர் பேரவை நிர்வாகி ரோப் பரதர், மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தேர் மாறன் கல்லறை மீட்பு குழு நிர்வாகிகள் செய்திருந்தனர்.

  • Share on

தூத்துக்குடி மக்களே... கையோடு குடையை கொண்டு போங்க!

தூத்துக்குடியில் வஉசி சிலைக்கு பாஜக மாலை அணிவித்து மரியாதை!

  • Share on