• vilasalnews@gmail.com

தூத்துக்குடி மக்களே... கையோடு குடையை கொண்டு போங்க!

  • Share on

தமிழ்நாட்டில் இன்று ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால் இந்திய வானிலை மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.


தமிழ்நாட்டில் சில தினங்களாக வடகிழக்கு பருவமழை பரவலாக மழை பெய்து வருகிறது. வட மற்றும் தென் தமிழகம், உள் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் இன்று இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், கேரளா, மாஹே ஆகிய இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை இன்று பெய்யும் என்றும், தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்புள்ளதாகவும் இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. அதில், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, கடலூர், அரியலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

  • Share on

தூத்துக்குடி மாவட்டத்தில் 24 மணி நேரத்தில் எவ்வளவு மழை பெய்துள்ளது? அதிகபட்ச மழை எங்கு தெரியுமா?

சுதந்திர போராட்ட வீரர் மன்னர் தேர் மாறன் நினைவிடத்தில் திரைப்பட நடிகர் ஸ்ரீ நாத் மாலை அணிவித்து மரியாதை!!

  • Share on