தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக சில நாட்களாக மழை பெய்து வருகிறது. ஆங்காங்கே சாரல் மழையாகவும், சில நேரம் பலத்த மழையாகவும் பெய்கிறது. இந்நிலையில், தூத்துக்குடியில் நேற்று இரவு பலத்த காற்றுடன் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று காலை 6.30 மணி வரை கடந்த 24 மணி நேரத்தில் 161.60 மிமீ மழை பெய்துள்ளது.
அதிகபட்சமாக காயல்பட்டினம் 42 மிமீ மழையும், கோவில்பட்டியில் 24 மிமீ, தூத்துக்குடியில் 18மிமீ, கழுகுமலையில் 13மிமீ, ஸ்ரீவைகுண்டத்தில் 8.20மிமீ, திருச்செந்தூரில் 4மிமீ, சாத்தான்குளம் 2மிமீ, கயத்தார் 6மிமீ, எட்டயபுரம் 11.40மிமீ, விளாத்திகுளம் 3மிமீ, வைப்பார் 7மிமீ, சூரங்குடி 10மிமீ மழையும் பதிவாகி உள்ளது. இதனால் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.