• vilasalnews@gmail.com

புதியம்புத்தூர் கிணற்றில் மிதந்த ஆண் சடலம்!

  • Share on

புதியம்புத்தூரில் உள்ள ஒரு தோட்டத்து கிணற்றில் மிதந்த ஆண் சடலத்தை கைப்பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.


புதியம்புத்தூர் நடுவக்குறிச்சியை சேர்ந்த சக்கரபாண்டி என்பவருக்கு வடக்கு கண்மாய் அருகில் தோட்டம் உள்ளது. சக்கரபாண்டி தனது தோட்டத்தில் மோட்டார் போடுவதற்காக சென்றபோது அங்கு கிணற்றில் இறந்த நிலையில் ஆண் உடல் ஒன்று மிதந்துள்ளதை பார்த்துள்ளார். இதனை அடுத்து அவர் புதியம்புத்தூர் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


விசாரணையில், இறந்தவர் புதியம்புத்தூர் கீழ தெருவை சேர்ந்த கூலித் தொழிலாளியான மனோகரன் ( 50 ) என்பவது தெரியவந்தது. இவருக்கு கண்ணியம்மாள் என்ற மனைவியும் மூன்று மகள்களும் ஒரு மகனும் உள்ளனர் என்பதும் தெரியவந்தது. மேலும் இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

  • Share on

இந்து முன்னணி நிர்வாகிகள் கைதை கண்டித்து தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம்!

தூத்துக்குடி அருகே வெளியே வருவது போல வீடியோ எடுத்த 2 வாலிப முத்துகளை தூக்கி உள்ளே போட்ட போலீஸ்!

  • Share on