• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

  • Share on

கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கண்டித்து, நாடு தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் தூத்துக்குடியில்  நடைபெற்றது.

கடந்த 23 மாத காலகட்டத்தில் கட்டிடத் துறையில் முக்கிய மூலப்பொருளான சிமெண்ட் மற்றும் கம்பிகள் அபரிமிதமான விலை ஏற்றத்தை கண்டித்து, தூத்துக்குடியில், அகில இந்திய கட்டுனர் சங்கம் சார்பாக நாடு தழுவிய ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம்  இன்று 12.02.2021 (வெள்ளிக்கிழமை) VVD. சிக்னல் அருகில்  நடைபெற்றது.


ஆர்ப்பாட்டத்தில் தலைவர் அசோக் தலைமை வகித்தார். மேலும் மத்திய, மாநில அரசுகள் இப்பிரச்சனைகளில் உடனடியாக தீர்வு காண கோஷங்கள் எழுப்பப்பட்டது. 

ஆர்ப்பாட்டத்தில் துணைத் தலைவர் பாஸ்கர், செயலாளர் ராஜேஷ், துணை செயலாளர் ஜெயபால், பொருளாளர் செல்வம் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், மற்றும் கட்டிட தொழிலாளர்கள். பலர்  கலந்து கொண்டனர்.

  • Share on

கருப்பு வைரம் : தூத்துக்குடியில்; பலே ஆசாமி 2 பேர் கைது ‍

6 லட்சம் மதிப்புள்ள 61 செல்போன்கள் பறிமுதல் செய்யபட்டு உரியவர்களிடம் இன்று ஒப்படைப்பு

  • Share on