தூத்துக்குடியில் விடாது பெய்த தொடர் மழையால் வீதிகளில் உள்ள சாலைகள் எங்கும் தேங்கிய மழை நீரானது வெள்ளம் போல காட்சியளிக்கிறது
தூத்துக்குடி மாநகராட்சியில், நேற்று (12.11.2020) இரவு பெய்ய ஆரம்பித்த மழையானது விட்டு, விட்டு பெய்து , விடாமல் தொடர்ந்து பெய்து வருவதையடுத்து , மாநகரில் மழைநீர் தேங்காத சாலைகளே இல்லை என்ற அளவிற்கு, அனைத்து தெருக்களிலும் மழைநீர் தேங்கி வெள்ளம் போல காட்சியளிக்கிறது.
சாலைகளில் தேங்கிய மழைநீரால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.மேலும் சில பகுதிகளில் சாலைகளில் தேங்கிய மழைநீரானது வீட்டுக்குள்ளும் புகுந்துள்ளதால்,பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், மழை மேலும் ஒரிரு தினங்களுக்கு நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருப்பதால், மழையின் பாதிப்பு அதிகரிக்க கூடும் என்பதால், தூத்துக்குடி மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகம் மழைக்கால பாதுகாப்பு நடைவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.