தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் வருகிற 20ஆம் தேதி குடிநீர் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாநகரின் குடிநீர் விநியோக பாதையான வல்லநாடு தலைமை நீரேற்று நிலையம், கலியாவூர் மற்றும் கீழ வல்லநாடு குடிநீர் சுத்திகரிப்பு நிலைய பகுதிகளில் வரும் மின்சார பாதையான கொம்பு காரநத்தம் துணை மின் நிலையத்தில் வருகின்ற 20.11.2024 புதன் கிழமை அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால், அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் குடிநீர் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப் படுகிறது. ஆகவே, பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு மாநகராட்சி ஆணையர் மதுபாலன் தெரிவித்துள்ளார்.