தூத்துக்குடி - சென்னை இடையே இயக்கப்படும் முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயிலில் கூடுதல் பெட்டி தற்காலிகமாக இணைக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கும், சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கும் தினமும் இரவு நேரத்தில் முத்துநகர் விரைவு ரயில் (12693/12694) இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு செல்லும் வண்டி எண் 12694-ல் நவ.; 15 மற்றும் 17 ஆகிய நாட்களும், மறு மார்க்கமாக சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு செல்லும் வண்டி எண் 12693-ல் நவ.; 16 மற்றும் 18 ஆகிய நாட்கள் கூடுதலாக ஒரு இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட பெட்டி தற்காலிகமாக இணைக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
கூடுதல் பெட்டியை இணைத்த தெற்கு ரயில்வே நிர்வாகத்திற்கு தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச் சங்கத்தின் செயலாளர் பிரம்மநாயகம் நன்றி தெரிவித்துள்ளார்.