திருச்செந்தூர் பகுதியில் தற்போது கனமழை பெய்து வருவதால் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று பௌர்ணமி தினத்தை முன்னிட்டு கோவிலுக்கு வரும் பக்தர்கள் கடற்கரையில் தங்குவதை தவிர்க்குமாறு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் மாதம் தோறும் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு லட்சக்கணக்காக பக்தர்கள் திருச்செந்தூர் கடற்கரையில் தங்கி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் திருச்செந்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று (14.11.2024) இரவு முதல் தற்போது வரை 60 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாலும், மேலும் இன்று (15.11.2024) காலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருவதாலும் திருச்செந்தூர் கோவில் கடற்கரை பகுதிகளில் பக்தர்கள் தங்க இயலாது.
எனவே இன்று (15.11.2024) திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று பௌர்ணமி தினத்தை முன்னிட்டு கோவிலுக்கு வரும் பக்தர்கள் கடற்கரையில் தங்குவதை தவிர்க்குமாறு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.