தூத்துக்குடி இனிகோ நகர் கடற்கரை பகுதியில் கடத்தலுக்காக பீடி இலைகளை வைத்திருந்த 4 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 1200 கிலோ பீடி இலைகள் போலீசார் பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி கடற்கரை பகுதியில் இருந்து பீடி இலைகள் கடத்தப்படுவதாக வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவின் படி தனிப்படை போலீசார் நேற்று (13.11.2024) இரவு ரோந்து பணியில் ஈடுபட்டபோது தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இனிகோ நகர் கடற்கரை பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் ஒரு படகில் இருந்தவர்களை விசாரணை செய்ததில் அவர்கள் தூத்துக்குடி இனிகோ நகரை சேர்ந்தவர்களான ஜெரோம் மகன் ஜெகதீஷ் (21), கொன்சாய் மகன் பரித் (21), சகாயம் மகன் கவாஸ்கர் (23) மற்றும் பிச்சையா மகன் டார்வின் (22) என்பதும், அந்த படகை சோதனை செய்ததில் அதில் சுமார் 1200 கிலோ எடையுள்ள பீடி இலை பண்டல்கள் இருந்ததும் அவற்றை சட்டவிரோதமாக கடத்தலுக்காக வைத்திருந்ததும் தெரியவந்தது.
உடனே தனிப்படை போலீசார் ஜெகதீஷ், பரித், கவாஸ்கர் மற்றும் டார்வின் ஆகிய 4 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்த 1200 கிலோ பீடி இலைகளையும் பறிமுதல் செய்து தூத்துக்குடி சுங்கத்துறையியினரிடம் ஒப்படைத்தனர்.