• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் உதயநிதி 'இன்', கனிமொழி 'அவுட்'... வெளியானது காரணம்!

  • Share on

தூத்துக்குடியில் நடந்த ஆய்வு கூட்டத்தில் கனிமொழி எம்பி பங்கேற்காதது குறித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். 


தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு அனைத்து துறைவாரியாக அதிகாரிகளிடம் பணிகள் வளர்ச்சிப் பணிகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் மக்கள் நலத்திட்டங்கள் விரைவாக மக்களுக்கு சென்றடைய வேண்டும் என அதிகாரிகளிடம் அவர் கேட்டுக் கொண்டார். 


இந்த ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர்கள் கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட ஆட்சியர் இளம் பகவத், திருநெல்வேலி சரக துணைத் தலைவர் மூர்த்தி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உள்பட பலர்  கலந்து கொண்டனர். 


கலந்தாய்வு கூட்டத்தை முடித்து விட்டு வந்த தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது "முதல்வர் உத்தரவுப்படி ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சுற்றுப்பயணம் செய்து ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் அமைச்சர்கள் முன்னிலையில் சிறப்பு திட்ட செயலாக்குத்துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களை ஆய்வு செய்து வருகிறோம். கடந்த 3 ஆண்டுகளில் அரசு திட்டங்கள் எவ்வளவு முடிக்கப்பட்டுள்ளது. முடியாத திட்டங்களுக்கு ஏன் சுனக்கம் ஏற்பட்டுள்ளது என்பது குறித்தும் ஆராய்ந்து அதனை விரைவில் முடிக்க வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம்.


தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆய்வு கூட்டம் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. இந்த ஆய்வு முடிவுகளை முதல்வர் அலுவலகத்தில் சமர்ப்பிப்போம் அதன் அடிப்படையில் அவர்கள் நடவடிக்கை மேற்கொள்வார்கள் என்றார். மேலும், துணை முதல்வர் நிகழ்ச்சியில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கலந்து கொள்ளவில்லையே என்ற கேள்விக்கு அவர் பதில் கூறும் போது எம்பி கனிமொழி வெளிநாடு சென்று இருப்பதால் இந்த கூட்டத்தில் அவர் பங்கேற்க முடியவில்லை. இன்னும் 15 நாளில் அவரும் நானும் சேர்ந்து இங்கு ஆய்வு கூட்டத்தில் பங்கேற்கப்போம் என்றார்.

  • Share on

அடகு வைத்த 135 பவுன் தங்க நகையை திருப்பித் தர மறுப்பு.. தூத்துக்குடி ஜார்ஜ் ரோட்டில் உள்ள அன்னை பைனான்ஸ் மீது பெண் எஸ்பி அலுவலகத்தில் புகார்!

தூத்துக்குடியில் பீடி இலை கடத்தல் - 4 பேர் கைது!!

  • Share on