தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினரான திமுகவைச் சேர்ந்த சண்முகையா ஒவ்வொரு நாளும் பல கிலோ மீட்டர் தூரம் தொகுதியில் வலம் வந்து மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றி கொடுப்பதில் பெரும் முனைப்போடு செயல்படுவதால், தொகுதி மக்கள் அவருக்கு புகழ்ச்சி மணிமகுடம் சூட்டி கொண்டாடி வருகின்றனர்.
அதற்கான ஒரு சாட்சி தான், இன்றைய தினம் ( 11.11.24 ) ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம், ஓசநூத்து கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் பல்நோக்கு கட்டிடம் கட்டும் பணிகளுக்கான அடிக்கல் நாட்டுதல்
மேல அரசடி ஊராட்சி மேல வேலாயுதபுரம் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் பல்நோக்கு கட்டிடம் கட்டும் பணிகளுக்கான அடிக்கல் நாட்டுதல்
மேல அரசடி ஊராட்சி புளியமரத்து அரசடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளி குழந்தைகள் நேய உட்கட்மைப்பு திட்டத்தில் 34 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு கூடுதல் வகுப்பறைகள் கட்டும் பணிகளுக்கான அடிக்கல் நாட்டுதல்
வாலசமுத்திரம் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.6.50 லட்சம் மதிப்பீட்டில் பயணிகள் நிழற்குடை கட்டும் பணிகளுக்கான அடிக்கல் நாட்டுதல்
வெங்கடாசலபுரம் கிராமத்தில்ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டும் பணிகளுக்கான அடிக்கல் நாட்டுதல்
வெங்கடாசலபுரம் கிராமத்தில் ரூ.12.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டி முடிக்கப்பட்ட புதிய நியாய விலை கடை கட்டிடத்தை திறந்து வைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருதல்
வெங்கடாசலபுரம் கிராமத்தில் ரூ.1.55 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட உயர்மட்ட பாலத்தை திறந்து வைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருதல்
மேல லெட்சுமிபுரம் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கலையரங்கம் கட்டும் பணிகளுக்கான அடிக்கல் நாட்டுதல் பணி
மேட்டூர் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கலையரங்கம் கட்டும் பணிகளுக்கான அடிக்கல் நாட்டுதல் பணி
ஆகிய நிகழ்ச்சிகளில் ஒரே நாளில் கலந்து கொண்டு புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற பணிகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்கும் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சண்முகையா தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில், ஒட்டப்பிடாரம் தொகுதி திமுகவின் எஃகு கோட்டை என்பதை உணர்த்திடும் வகையில், தொகுதியில் கட்சி மற்றும் மக்கள் பணியை ஆற்றிட, ஒவ்வொரு நாளும் தொகுதிக்குள் சராசரியாக 100 முதல் 200 கி.மீட்டர் பயணம் செய்து, ஓய்வின்றி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சிறப்பித்து வரும் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சண்முகையாவின் பணி மகத்தானது என திமுகவினரும், தொகுதி மக்களும் பெருமிதம் கொள்கின்றனர்.