• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலக திறப்பு விழா

  • Share on

தூத்துக்குடியில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகத்தினை அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் திறந்து வைத்தார். 

தூத்துக்குடி சிதம்பரநகரில் இந்து சமய அறநிலையத் துறையின் தூத்துக்குடி மண்டல இணை ஆணையர் அலுவலக துவக்க விழா இன்று நடைபெற்றது. விழாவில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ  இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச் சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு தூத்துக்குடி மண்டல இணை ஆணையர் அலுவலகத் தினை துவக்கி வைத்தனர். இவ்விழாவில் சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.பி.சண்முக நாதன் (ஸ்ரீவைகுண்டம்), சின்னப்பன் (விளாத்திகுளம்) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் தெரிவித்ததாவது:

தமிழ்நாடு முதலமைச்சர் 24.03.2020 அன்று சட்டப்பேரவையில் இந்து சமய அறநிலையத்துறையில் 9 இடங்களில் புதிதாக இணை ஆணையர் அலுவலகங்கள் தோற்றுவிக்கப்படும் எனவும், இதற்காக ரூ.9 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என அறிவித்தார்.

மேலும் ஒவ்வொரு இணை ஆணையர் அலுவலகத்திற்கும் 19 புதிய பணியிடங்கள் வீதம் மொத்தம் 171 பணியிடங்கள் ஏற்படுத்திட ஆணையிடப் பட்டுள்ளது. அதனடிப்படையில் தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டத்தை உள்ளடக்கி தூத்துக்குடி இணை ஆணையர் மண்டல அலுவலகம் இன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது.என தெரிவித்தார்.


தொடர்ந்து திருக்கோவில்களில் பணியாற்றி பணியிடை காலமான 2 நபர்களின் வாரிசுதாரர்களுக்கு பணி நியமன உத்தரவும், ஒரு நபருக்கு குடும்ப நல நிதியாக ரூ.3 லட்சத்துக்கான காசோலையும் அமைச்சர்கள் வழங்கினர். 

இந்நிகழ்ச்சியில் சார் ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் கலோன், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் செயல் அலுவலர் விஷ்ணுசந்திரன், மாநகராட்சி ஆணையர் சரண்யா அரி, இந்து சமய அறநிலையத்துறை தூத்துக்குடி மண்டல இணை இயக்குநர் பரஞ்ஜோதி, மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர்கள் அருணாசலம், ரோஜாலி சுமதா, மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவர் செல்வகுமார், முக்கிய பிரமுகர்கள் திருப்பாற்கடல்,

செரினாபாக்யராஜ், ரத்னம், சுரேஷ்பாபு, மகேந்திரன், வழக்கறிஞர் ரவீந்திரன், விஜயகுமார், ராஜ்நாராயணன், காசிராஜன், அழகேசன், ராமச்சந்திரன் மற்றும் அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

  • Share on

தூத்துக்குடி மாவட்டத்திற்கு வரும் 17ஆம் தேதி முதல்வர் பழனிசாமி வருகை.

கருப்பு வைரம் : தூத்துக்குடியில்; பலே ஆசாமி 2 பேர் கைது ‍

  • Share on