தூத்துக்குடி அருகே உள்ள புதியம்புத்தூர் நடுவக்குறிச்சியை சேர்ந்த சக்திவேல் என்பவரது மகன் மகேந்திரன் ( 21 ). தூத்துக்குடியில் உள்ள ஒரு ஐடிஐயில் படித்து வந்த இவர் நேற்று மாலை தூத்துக்குடியில் இருந்து இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது, தூத்துக்குடி - எட்டயபுரம் சாலையில் உள்ள பேரிகார்டை கடக்க முயன்றபோது, பின்னால் தூத்துக்குடியில் இருந்து மதுரை நோக்கி சென்ற சரக்கு லாரி மகேந்திரன் பைக் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த மகேந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் சைரஸ் மற்றும் போலீசார், மகேந்திரனின் உடலை கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.