தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து நிலக்கரி ஏற்றி வந்த லாரி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் டிரைவர் காயம் அடைந்தார்.
தூத்துக்குடி துறைமுகம் சாலையில் அமைந்துள்ள தனியார் அனல் நிலையத்திற்கு தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து நிலக்கரி ஏற்றிக்கொண்டு டிப்பர் லாரி ஒன்று நேற்று அதிகாலை துறைமுக சாலையில் வந்து கொண்டிருந்துள்ளது. அப்போது திடீரென சாலையில் இருந்து வெளியே சென்ற டிப்பர் லாரி சாலையின் ஓரத்தில் இருந்த பள்ளத்தில் தலை குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் லாரியை ஓட்டி வந்த டிரைவர் சிறிய காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினார். தகவல் அறிந்து விரைந்து வந்த ஊழியர்கள் பள்ளத்தில் கவிழ்ந்து கிடக்கும் லாரியை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து தெர்மல் நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.