• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் என்டிபிஎல் அனல் மின்நிலைய ஒப்பந்த ஊழியர் மரணம் : உடலை வாங்க மறுத்து 2 வது நாள் தொடரும் போராட்டம்!

  • Share on

தூத்துக்குடியில் மா்மமான முறையில் இறந்த என்டிபிஎல் அனல் மின்நிலைய ஒப்பந்த ஊழியருக்கு உரிய நிவாரணம் வழங்க கோரி உடலை வாங்க மறுத்து இன்று 2வது நாளாக உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


தூத்துக்குடி முத்தையாபுரம் தங்கமணி நகரை சோ்ந்த சுடலை மகன் அசோக்குமாா்(46). இவா் தூத்துக்குடி என்டிபிஎல் அனல்மின் நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில் பிளம்பராக பணியாற்றி வந்தாா். இந்த நிலையில், நேற்று வழக்கம்போல வேலைக்குச் சென்ற அவர், அங்குள்ள ஒரு மோட்டாரை பழுதுநீக்கி முடித்துவிட்டு தரையில் அமா்ந்து இருந்தாராம். 


அப்போது அவா் திடீரென மயங்கி விழுந்ததாகக் கூறப்படுகிறது. உடனடியாக அவரை மீட்டு தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். ஆனால், அவா் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். மேலும், அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து தொ்மல் நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.


இந்நிலையில், உயிரிழந்த அசோக்குமாரின் மரணத்திற்கு உரிய நீதி வேண்டும், குடும்பத்திற்கு ரூ. 50 லட்சம் இழப்பீடு, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை ஆகியவை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அனல் மின்நிலையம் முன்பு அவரின் உறவினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதில், சிஐடியூ, ஆதிதமிழா் பேரவை, தொழிலாளா் முன்னேற்ற சங்கம் உள்ளிட்ட தொழிற்சங்கத்தினா் பங்கேற்றனா்.


இதைத்தொடர்ந்து வருவாய்த்துறையினர் மற்றும் என்டிபிஎல் நிர்வாகம் சார்பில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எவ்வித உடன்பாடும் ஏற்படவில்லை. இதையடுத்து இன்று காலை பலியான அசோக்கின் உடலை வாங்க மறுத்து அசோக்கின் குடும்பத்தினர் மற்றும் தொழிற்சங்க தொழிற்சங்கத்தினர் என்டிபிஎல் ஒப்பந்த ஊழியர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் வேலைக்குச் செல்லாமல் பணிகளை புறக்கணித்து அனல் மின் நிலையம் முன்பு 2வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

  • Share on

தூத்துக்குடி மாவட்ட மக்களே... ரேஷன் கார்டுகளில் திருத்தம் செய்ய இன்று உங்களுக்கு ஓர் வாய்ப்பு!

தூத்துக்குடி பெண்களே... இந்த விஷயம் உங்களுக்கு தெரியுமா?

  • Share on