• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் கால்நடை வளர்ப்பவர்களா நீங்கள்? அலர்ட்!

  • Share on

தூத்துக்குடி மாநகராட்சி எல்கைக்குட்பட்ட பகுதிகளில் சுற்றித் திரியும் கால்நடைகளால் பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் அச்சுறுத்தல் ஏற்படுவதால் மாடுபிடிக்கும் பணியாளர்களைக் கொண்டு மாநகராட்சி பகுதிகளில் மாடுகள் பிடிக்கும் பணி நடைபெற உள்ளது.


எனவே பொது மக்கள் தங்களது கால்நடைகளை பொது இடங்களில் சுற்றி திரிய விடாமல் அவரவர் வீட்டில் பராமரித்திட இதன் மூலம் அறிவுறுத்தப்படுகிறது. தவறும் பட்சத்தில் மாநகராட்சி மூலம் அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் மதுபாலன் கடந்த சில தினங்களுக்கு முன்பு எச்சரிக்கை விடுத்திருந்தார்.


அதன் தொடர்ச்சியாக, தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் பொது மக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறாக சாலையில் திரியக்கூடிய மாடுகளை பிடித்து அடைப்பதற்கான கொட்டகை அமைக்கும் பணிகளை தொடங்கப்பட்டுள்ளது. அப்பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் ஆய்வு செய்தார். 


ஆகவே, இனி பொது மக்கள் தங்களது கால்நடைகளை பொது இடங்களில் சுற்றி திரிய விடாமல் அவரவர் வீட்டில் பராமரித்திட வேண்டும். இல்லையேல் மாநகராட்சி சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பது குறிப்பிடதக்கது.


  • Share on

திமுக அரசின் மற்றொரு மைல்கல் சாதனை... தொகுதி எம்எல்ஏ சண்முகையாவின் முயற்சிக்கு கிடைத்த வெற்றிப்படிகளில் ஒன்று!

தூத்துக்குடியில் பொழுபோக்கிற்கான இடம் தேடுபவரா நீங்கள்? இதோ உங்களுக்காக!

  • Share on