எட்டயபுரம் அருகே உள்ள இளம்புவனம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் கணேசன். இவர் நேற்று எட்டயபுரத்தில் உள்ள திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்று உள்ளார்.
அப்போது, மண்டபத்தின் அருகே சென்றபோது சாலையில் கிடந்த 3 பவுன் தங்க நகையை கண்டெடுத்துள்ளார். இதனை அவரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக வர்த்தக அணி துணை அமைப்பாளருமான முனியசாமி ஆகியோர், எட்டயபுரம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர் மாதவ்ராஜிடம் ஒப்படைத்தனர்.
இந்த நிலையில், எட்டயபுரம் உமறுப்புலவர் தெருவை சேர்ந்த ராஜமுருகன் மனைவி வீரலட்சுமி ( 45 ) என்பவர் தனது நகை தொலைந்து விட்டதாக எட்டயபுரம் காவல் நிலையத்திற்குச் சென்றார். பின்னர் போலீசார் விசாரித்ததில் கணேசன் ஒப்படைத்த நகை வீரலட்சுமி உடையது என்பதை கண்டுபிடித்தனர். இதனையடுத்து எட்டயபுரம் போலீஸர் கணேசன் முன்னிலையில் தங்க நகை வீரலட்சுமியிடம் ஒப்படைத்தனர்.
சாலையில் கடந்த நகையை ஒப்படைத்த கணேசனை எட்டயபுரம் போலீசார் பாராட்டினர். வீரலட்சுமியும் நன்றி தெரிவித்தார்.