• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் காவல் உதவி ஆய்வாளரை கத்தியால் தாக்க முயன்றவர் கைது!

  • Share on

தூத்துக்குடியில் காவல் உதவி ஆய்வாளரை கத்தியால் தாக்க முயன்றவரை போலீசார் கைது செய்தனர்.


தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுப்புராஜ் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது பூபாலராயபுரம் மீன் மார்க்கெட் அருகே சந்தேகப்படும்படி நின்றிருந்தவரை மடக்கி பிடிக்க முயன்றார். அப்போது அவர் மறைத்து வைத்திருந்த கத்தியால் உதவி ஆய்வாளரை தாக்க முயன்று அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். சுதாரித்துக் கொண்ட காவல் உதவி ஆய்வாளர் சுப்புராஜ் அவரை லாவகமாக மடக்கி பிடித்தார். பின்னர் விசாரணையில் அவர் தூத்துக்குடி டூவிபுரம் 10 வது தெருவை சேர்ந்த பெயிண்டர் ராஜா என்ற ராஜமணி ( 32 ) என்பது தெரியவந்தது.


மேலும், இது குறித்த புகாரின் பேரில் வடபாகம் காவல் நிலைய போலீசார் ராஜா என்ற ராஜாமணியை கைது செய்தனர். இவர் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

  • Share on

தூத்துக்குடி மாநகராட்சி வாகன காப்பகத்தில் ஊழியரை தாக்கி பணம் பறிப்பு : இருவர் கைது!

எட்டயபுரத்தில் சாலையில் கிடந்த 3 பவுன் தங்க நகை : உரியவரிடம் ஒப்படைத்த முன்னாள் பஞ்., தலைவருக்கு பாராட்டு!

  • Share on