• vilasalnews@gmail.com

அஞ்சல் ஆயுள் காப்பீடு முகவர் பணிக்கு நவ.,23க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

  • Share on

கோவில்பட்டி கோட்டத்தில் அஞ்சல் ஆயுள் காப்பீடு முகவர் பணிக்கு வருகிற 23ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோட்ட கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

 அஞ்சல் ஆயுள் காப்பீடு மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு முகவர் பணிகளுக்கு, கோவில்பட்டி அஞ்சல் கோட்டத்திற்கு உட்பட்ட முகவரியில் வசிக்கும் தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது.

காப்பீடு முகவர் பணிக்கு குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். 10-ஆம் வகுப்பு அல்லது அதற்கு நிகரான மத்திய, மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட வாரியத்தால் நடத்தப்பட்ட தேர்வில் தேர்ச்சி பெற்ற, வேலைவாய்ப்பற்ற, சுய தொழில் செய்யும் இளைஞர்கள், முன்னாள் ஆலோசகர்கள், முன்னாள் ஆயுள் காப்பீடு முகவர்கள், முன்னாள் ராணுவத்தினர், அங்கன்வாடி மற்றும் மகிளா மண்டல பணியாளர்கள், ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியர்கள், சுய உதவி குழுக்களில் செயல்படுவோர், கிராம தலைவர், கிராம சபை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் விண்ணப்பிக்கலாம்.

தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். பாலிசிகள் பிரீமியம் அடிப்படையில் கமிஷன் வழங்கப்படும். இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் முகவர்கள் மட்டும் ரூ.5 ஆயிரத்தை காப்பீட்டு தொகையாக தேசிய சேமிப்பு பத்திரம் அல்லது கிசான் விகாஸ் பத்திர வடிவில் செலுத்த வேண்டும். தங்களுக்கு ஏஜென்சி காலம் முடிக்கப்படும் போது காப்பீட்டு தொகையாக செலுத்தப்பட்ட பணமானது தகுந்த வட்டியுடன் திருப்பி வழங்கப்படும்.

இதற்கான விண்ணப்பங்களை அருகில் உள்ள தபால் நிலையங்களில் பெறலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அதில் கூறப்பட்டுள்ள ஆவணங்களுடன் வருகிற 23-ம் தேதிக்குள், அஞ்சலக கண்காணிப்பாளர், கோவில்பட்டி கோட்டம், கோவில்பட்டி-628501 என்ற முகவரிக்கு பதிவு தபாலில் அனுப்ப வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

  • Share on

கணவன், மனைவி இரட்டை கொலை வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை : தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு!

ஆராரோ ஆரிரரோ.. ஆரடிச்சு நீயழுதாய் கண்மணியே கண்ணுறங்கு : அழுத குழந்தையை அமைதி படுத்திய அமைச்சர் கீதாஜீவன்

  • Share on