• vilasalnews@gmail.com

கணவன், மனைவி இரட்டை கொலை வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை : தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு!

  • Share on

கேரள தம்பதியை கொலை செய்த வழக்கில் பந்தல் தொழிலாளிக்கு இரண்டு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி மாவட்ட பட்டியல் இனம் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கேரள மாநிலம் மூணாறு கோதமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் தேவசிங் என்ற தேவ சியா என்ற சாக்கோ ( 60 )  இவரது மனைவி மேரி ( 50 ) மேரியின் தங்கை ஏலியம்மாள் ( 48 ).  இவர்கள் மூன்று பேரும் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் சிதம்பரேஸ்வரர் கோவில் அருகில் தங்கி இருந்து பழைய பேப்பர் பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து விற்பனை செய்து வந்தனர்.

இந்த நிலையில், கடந்த 17.10.2013 அன்று இரவு 9 மணி அளவில் பந்தல் போடும் தொழில் செய்து வரும் உடன்குடி பிள்ளையார் பெரியவன் தட்டு  பகுதியைச் சேர்ந்த அமச்சியார் மகன் செல்வம் ( 43 ) என்பவர், மேரியை தவறான நோக்கத்தில் கையைப் பிடித்து இழுத்து பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார். இதனால் செல்வத்திற்கும் மேரிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த செல்வம் மறைத்து வைத்திருந்த அரிவாளால் மேரியை சரமாரியாக வெட்டியுள்ளார்.  அதை தடுக்கச் சென்று அவரது கணவர் தேவசிங் என்ற தேவ சியா என்ற சாக்கோ வையும்  செல்வம் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே மேரி பரிதாபமாக உயிரிழந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் சாக்கோ திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலனின்றி 19.10.2013 இல் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஏலியம்மாள் அளித்த புகாரின் பேரில் குலசேகரப்பட்டினம் போலீசார் வன்கொடுமை வழக்கு பதிவு செய்து, செல்வத்தை கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி மாவட்ட பட்டியல் இனம் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கில் 3.1.2014 ல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. வழக்கில் 17 சாட்சிகள் விசாரிக்கப்பட்டன. வழக்கை நீதிபதி உதயவேலன் விசாரித்து செல்வத்திற்கு இரண்டு கொலைகளுக்கும் தனித்தனியாக ஆயுள் தண்டனையும், அதனை ஏக காலத்தில் அனுபவிக்கவும் ரூ.10,000 அபராதம் விதித்தும் தீர்ப்பு கூறினார். இவ்வுலகில் அரசுதரப்பில் வழக்கறிஞர் பூங்குமார் ஆஜரானார்.

  • Share on

சுமார் 2,200 கி.மீ தொலைவில் இருந்து திருச்செந்தூருக்கு வந்த மயிலிறகு மாலை : பக்தர்கள் நெகிழ்ச்சி!

அஞ்சல் ஆயுள் காப்பீடு முகவர் பணிக்கு நவ.,23க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

  • Share on