• vilasalnews@gmail.com

சுமார் 2,200 கி.மீ தொலைவில் இருந்து திருச்செந்தூருக்கு வந்த மயிலிறகு மாலை : பக்தர்கள் நெகிழ்ச்சி!

  • Share on

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்த சஷ்டி விழாவில் சுவாமி ஜெயந்திநாதருக்கு குஜராத்திலிருந்து கொண்டுவரப்பட்ட மயிலிறகு மாலை அணிவிக்கப்பட்டது


திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு நாள்தோறும் அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகிறது. யாகசாலையில் எழுந்தருளிய சுவாமி ஜெயந்திநாதருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரமாகி, மதியம் மூலவருக்கு உச்சிகால தீபாரதனை முடிந்தவுடன் சுவாமி ஜெயந்தி நாதருக்கு யாகசாலையில் தீபாராதனையாகி தங்கச்சப்பரத்தில் எழுந்தருளி வருகிறார்.


இந்த நிலையில், சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் பிரபாகரன் நேற்று காலை சுவாமி ஜெயந்தி நாதருக்கும், வள்ளி தெய்வானை அம்மனுக்கும் பிரத்தியேகமாக மயில் இறகுகளால்  கோர்க்கப்பட்ட மாலையை அணிவித்து வழிபட்டார். குஜராத்தில் இருந்து மயில் இறகுகள் விமான மூலம் பெங்களூருக்கு வரவழைக்கப்பட்டு, அங்கு வண்ண மாலைகளாக கோர்க்கப்பட்டது. பின்னர் விமானம் மூலம் தூத்துக்குடிக்கும் அங்கிருந்து திருச்செந்தூருக்கும் கொண்டுவரப்பட்டது. அழகும் கலை நயமிக்கதாகவும் இருந்த மயிலிறகு மாலை அலங்காரத்தில் சுவாமி ஜெயந்தி நாதரை பக்தர்கள் தரிசித்து மெய்சிலிர்த்தனர்.

  • Share on

திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழா : மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதி, போக்குவரத்து சேவைகளை அறிந்து கொள்ள காவல்துறை புதிய ஏற்பாடு!

கணவன், மனைவி இரட்டை கொலை வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை : தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு!

  • Share on