தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த இருந்த சுமார் ரூ.80 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
தூத்துக்குடி கடலோர காவல் நிலைய ஆய்வாளர் பேச்சிமுத்து தலைமையிலான போலீசார் திரேஸ்புரம் மேட்டுப்பட்டி கடற்கரையில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, அங்கு நிறுத்தியிருந்த வாகனத்தை சோதனையிட்டபோது அதில், 160 கிலோ கடல் வெள்ளரி, 37 மூட்டைகளில் 1500 கிலோ பீடி இலை இருந்தது தெரியவந்தது.
இவற்றை மர்ம நபர்கள் இலங்கைக்கு சட்ட விரோதமாக கடத்த முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து, பீடி இலை உள்ளிட்டவைகள் சரக்கு வாகனத்துடன் போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு சுமார் ரூ.80லட்சம் ஆகும். மேலும், இவற்றை இலங்கைக்கு கடத்த முயன்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.