• vilasalnews@gmail.com

தூத்துக்குடி மாவட்டத்தில் பரவலாக மழை!

  • Share on

தூத்துக்குடி மாநகர் உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது. 

வங்கக்கடலில் உருவாக உள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தூத்துக்குடி, நெல்லை, குமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய  வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது.

இன்று காலை 6.30 மணி நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் அதிக பட்சமாக குலசேகரன்பட்டினத்தில் 33 மிமீ மழை பெய்துள்ளது. மேலும், திருச்செந்தூரில் 27மிமீ, தூத்துக்குடியில் 8.10 மிமீ, எட்டயபுரத்தில் 5.10மிமீ, ஸ்ரீவைகுண்டத்தில் 4.10மிமீ, சாத்தான்குளத்தில் 2.20 மிமீ, கழுகுமலையில் 2 மிமீ, என மாவட்டத்தில் மொத்தம் 81.5 மிமீ மழை பெய்துள்ளது. 

  • Share on

தூத்துக்குடியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது : கஞ்சா பறிமுதல்!

திருச்செந்தூர் கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம் : தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அறிவிப்பு!

  • Share on