• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் 11 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இடமாற்றம் : ஆட்சியர் உத்தரவு

  • Share on

தூத்துக்குடி மாவட்டத்தில் பணியாற்றி வரும் 11 வட்டார வளர்ச்சி அலுவலர்களை நிர்வாக காரணங்களுக்காக இட மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவிட்டு உள்ளார்.

தூத்துக்குடி உதவி இயக்குனர் (சிறுசேமிப்பு) அலுவலக கண்காணிப்பாளர் ராமநாதன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை வட்டார வளர்ச்சி அலுவலராகவும், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை வட்டார வளர்ச்சி அலுவலர் சிவராஜன், உதவி இயக்குனர் (தணிக்கை) அலுவலக கண்காணிப்பாளராகவும், உதவி இயக்குனர் (தணிக்கை) அலுவலக கண்காணிப்பாளர் பாலஅரிகரமோகன், ஓட்டப்பிடாரம் வட்டார வளர்ச்சி அலுவலராகவும் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

ஓட்டப்பிடாரம் வட்டார வளர்ச்சி அலுவலர் மரிய மார்கரெட் வளர்மதி, தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலராகவும், தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலர் சித்தார்த்தன், தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (கிராம பஞ்சாயத்து), தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம பஞ்சாயத்து) வசந்தா, விளாத்திகுளம் வட்டார வளர்ச்சி அலுவலராகவும், விளாத்திகுளம் வட்டார வளர்ச்சி அலுவலர் தங்கவேல், விளாத்திகுளம் வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (கிராம பஞ்சாயத்து) இட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

விளாத்திகுளம் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம பஞ்சாயத்து) முத்துக்குமார், ஓட்டப்பிடாரம் வட்டார வளர்ச்சி அலுவலராகவும், ஓட்டப்பிடாரம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஹெலன்பொன்மணி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கண்காணிப்பாளராகவும், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியன், ஆழ்வார்திருநகரி வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (கிராம பஞ்சாயத்து), ஆழ்வார்திருநகரி வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம பஞ்சாயத்து) சந்தோசம், மாவட்ட ஆட்சியர் அலுவலக மேலாளராகவும் (வளர்ச்சி) இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

  • Share on

"செட்டப்.. பூரா செட்டப்.. ஸ்டாலினால் நிறைய பேர் நொந்து போய்ட்டாங்க".. போட்டு தாக்கும் கடம்பூர் ராஜு

தூத்துக்குடி மாவட்டத்திற்கு வரும் 17ஆம் தேதி முதல்வர் பழனிசாமி வருகை.

  • Share on