தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக வாலிபரை ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி முத்தையாபுரம் காவல் உதவி ஆய்வாளர் ரமேஷ்குமார் தலைமையிலான போலீசார், நேற்று முத்தையாபுரம் பெட்ரோல் நிலையம் அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்ற வாலிபரை பிடித்து விசாரித்தனர்.
அவர், பழையகாயலை சேர்ந்த மைக்கேல்ராஜ்(23) என்பதும், விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து, அவரை கைது செய்த போலீசார், சுமார் 50 கிராம் கஞ்சா பொட்டலத்தை பறிமுதல் செய்தனர்.