தூத்துக்குடியில் சிசிடிவி கேமராக்களை உடைத்ததாக இளஞ்சிறார்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி வள்ளிநாயகிபுரம் 5, 6 தெருக்களில் வைக்கப்பட்டிருந்த 2 கண்காணிப்பு கேமராக்களை மர்ம நபர்கள் சில தினங்களுக்கு முன் உடைத்துள்ளனர். இது குறித்து அப்பகுதி மக்கள் தென்பாகம் காவல் நிலையத்திலும், ஏஎஸ்பியிடமும் புகார் அளித்தனர்.
அதன்பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், 3 இளஞ்சிறார்கள் மற்றும் வள்ளிநாயகபுரத்தை சேர்ந்த பரட்டை என்ற மாரிசெல்வம்(20) ஆகியோர் இந்த கேமராக்களை உடைத்தது தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் 4 பேரையும் கைது செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.